Nov 7, 2014

வியாபாரிகள் எதிர்ப்பால் ஜவ்வரிசி குடோனில் சோதனை நடத்த தடை 9 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது



சேலம், நவ.7:
சேலத்தில் தனி யார் ஜவ்வரிசி குடோன்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்தும் சோதனையை கண்டித்து சேலம் சேகோசர்வில் ஜவ் வரிசி கொள்முதலை நிறுத்தி 9 நாட்களாக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். வியாபாரிகள் எதிர்ப்பையடுத்து நேற்று முதல் சோதனை கைவிடப்பட்டுள்ளது.
சேலம் குரங்குச்சாவடியில் சேகோ சர்வ் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏல அடிப்படையில் ஜவ்வரிசி, வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கெடுபிடி செய்வதாக கூறி கடந்த 9 நாட்களாக, வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்து வந்தனர். இதனால் கி15 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் அடைந்தது.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சேகோ சர்வ் அதிகாரிகள் சென்னை சென்று அமைச்சர் மோகனை சந்தித்து விவ ரத்தை தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் சாந்தா தலைமை யில், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.
இதில், உணவு பாது காப்பு துறை துணை இயக்குனர் மணிமாறன், தொழில் வணிகத்துறை கூடுதல் இயக்குனர் பரமேஸ்வரன், சேகோ சர்வ் சேர்மன் அருள்முரு கன், கண்காணிப்பு குழு தலைவர் தமிழ்மணி, சேகோ சர்வ் வியாபாரிகள் சங்க தலைவர் தாராசந்த், செய லாளர் விகாஷ், நிர்வாகி வெங்கட்ராமன் உள்பட 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வியாபாரிகள் கூறுகையில், சேகோ சர்வ்வில் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்ட பின்னரே ஜவ்வரிசியை வாங்கி செல்கி றோம். ஆனால் சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் தர மற்ற, கலப்படம் செய்த ஜவ்வரிசியை விற்பனை செய்வ தாக கூறி, எங்கள் குடோன்களுக்கு சீல் வைக்கிறார். எனவே ஜவ்வரிசிக்கான தர நிர்ணயம் என்ன? என்பதை விளக்க வேண்டும். சிறு வியாபாரிகளை நசுக்கும் நோக்கில், கெடுபிடி காட்டும் அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை முடி வில், ஜவ்வரிசிக்கான தர நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், அது வரை வியாபாரிகளின் குடோனில் சோதனை நடத்துவது நிறுத்தி வைப்பது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை ஏற்று வியாபாரிகள் போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வந்தனர். இதனால் 9 நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. நேற்று மாலை சேகோ சர்வ்வில் வழக்கம் போல ஏலம் நடைபெற்றது.

No comments:

Post a Comment