Nov 7, 2014

வாழைப்பழ குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


விழுப்புரம், நவ. 7:
விழுப்புரம் நகரில் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் வாழைப்பழங்கள் கால்சியம் கார் பைடு கற்களை கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.
குறிப்பாக வாழைப்பழ குடோன்களில் இச்சம்பவம் அதிகளவில் நடப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபல வாழைப்பழ குடோனில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை அதிகாரிகள் எடுத்து சோதனை செய்ததில் எத்தினால் கேஸ் மற்றும் குளிர்சாதன வசதிகள் மூலம் விஞ்ஞான ரீதியாக பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உணவு பாதுகாப்புத்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதனால் மக்களுக்கு எவ்வித விளைவு கள் ஏற்படும் என்பதும் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் நகரில் பல குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேசன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment