Nov 7, 2014

உணவு பாதுகாப்பு சட்டம் திருத்தம் வணிகர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் கோரிக்கை


சென்னை, நவ. 7:
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் அரசு உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம் கடைகளில் கரப்பான் பூச்சி, தூசி இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமும் வருடக்கணக்கில் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வணிகர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு நடத்தப்பட்டது. வணிகர்களின் போராட்டத்தை அறிந்த பாஜவின் நரேந்திரமோடி அரசு உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பழைய திருத்தங்கள் நீக்கப்படும் என்றது. வருகிற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய திருத்தங்களை கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம். புதிய திருத்தம் வணிகர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment