Aug 23, 2014

காவேரிப்பட்டணத்தில் சுகாதாரமற்ற முறையில் சாஸ் தயாரித்த நிறுவனத்திற்கு சீல்



கிருஷ்ணகிரி, ஆக.21:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் சாஸ் தயாரித்த நிறுவனத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு மாவட்டத் தில் சுகாதாரமற்ற முறையில் சாஸ் மற்றும் குளிர்பானங் கள் தயாரிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி மற் றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துளசிராமன், சுவாமிநாதன் ஆகியோர் நேற்று திடீரென காவேரிப்பட்டணம் மற்றும் பண்ணந் தூர் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் சாஸ் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சாஸ் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் சாஸ் தயாரித்த நிறுவனத்தை டாக்டர் கலை வாணி தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத் தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment