Jun 19, 2014

வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் ரயிலில் வரும் ஆட்டிறைச்சியை ஆய்வு செய்ய வேண்டும்

சென்னை, ஜூன் 19:
ஜெய்ப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்ட்ரலுக்கு ரயிலில் 15 லட்சம் மதிப்புள்ள 3.3 டன் கெட்டுப்போன ஆட்டிறைச்சி வந்தது.
ரயில்வே போலீசாரின் தகவலின்படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடம் விரைந்து கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். ரயில்வே போலீசார் இதை கண்டுபிடிக்காவிட்டால் அனைத்து இறைச்சிகளும் சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு சென்றிருக்கும்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கே ஜான்பாஷா கூறியதாவது:
வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு இதுபோன்று கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள் வருவது வழக்கமாகி விட்டது. முக்கியமாக ரயிலில் இவைகள் கொண்டு வரப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சிகள் சென்னைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
அடிக்கடி ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று ரயிலில் வரும் இறைச்சிகள் வியாபாரிகள் இன்றி நேரடியாக ஸ்டார் ஓட்டல்களுக்கு செல்கிறது.
அவர்கள் இவற்றை பல மாதங்கள் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்டார் ஓட்டல்களிலும் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment