Jun 19, 2014

பேக்கரியில் சாப்பிட்ட பப்ஸில் பல்லி அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி


கோவை, ஜூன் 18:
கோவை ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்(28). இவர் தன் சக நண்பர்களுடன் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அப்போது ஜேம்ஸ் பப்ஸ் ஒன்றை ஆடர் செய்து சாப்பிட்டார். சாப்பிடும் போது கசப்பாக இருக்கிறது என வெளியில் எடுத்தார். அப்போது பப்ஸில் கருகிய நிலையில் பல்லி இருந்தது. இதனை கண்ட ஜேம்ஸ் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்தார். இதனை பக்கத்தில் இருந்து பார்த்த நீலிகோனம்பாளையத்தை சேர்ந்த சரோஜினி(58) என்பவரும் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜேம்ஸ்க்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வருகிறது. மயக்கத்தில் இருந்து மீண்ட சரோஜினி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கதிரவன் அடங்கிய குழு பேக்கரி சென்று உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் உண்மை நிரூபிக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


1 comment:

  1. It proves that neither FBO nor FDA is serious about Pest Control

    ReplyDelete