Nov 21, 2013

ஸ்ரீமுஷ்ணம் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு


ஸ்ரீமுஷ்ணம், நவ. 21:
குறிஞ்சிப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், காட்டுமன்னார்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சியான் உள்ளிட்டோர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா, சுகாதாரமாக உள்ளதா, அயோடின் உப்பு பயன் படுத்தப்படுகிறதா, தரமான தண்ணீர் பயன் படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
சமையலுக்கு பயன்படுத் தப்படும் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது, தரமான மசாலா பொருட்களை பயன் படுத்த வேண்டும், திறந்தவெளியில் பரோட்டா உள்ளிட்டவைகளை செய்யக்கூடாது, பஜ்ஜி விற்பவர்களிடம் கலர் பவுடர் அதிகமாக உபயோகப்படுத்தக்கூடாது, என அறிவுறுத்தினர். ஹோட்டலில் பயன்படுத்தப்படும் பூரி போன்றவைகள் திறந்த பாத்திரத்தில் இல்லாமல் மூடி வைக்கவேண்டும் எனவும், ஓட்டல்களில் கை கழுவும் இடத்தில் தனியாக தண்ணீர் டேப் அமைத்து சோப்பு வைக்க வேண்டும் எனவும், காய்கறிகளை தண்ணீரில் கழுவி உபயோகிக்க வேண்டும் என கூறி, குறைபாடுகளை களைய நோட்டீஸ் வழங்கினார்கள்.
நோட்டீஸ் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள், முறைப்படி குறைகளை நிவர்த்தி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment