Nov 21, 2013

ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப்பொருள் பறிமுதல்



காரைக்குடி, நவ. 21:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருள்நம்பி தெரிவித்தார்.
காரைக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் இறைச்சி, மீன், கோழி கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லத்துரை, ராஜேஷ், ஜோதிபாசு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இடையர்தெரு, ரயில்வேரோடு ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இறந்த ஆட்டை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இக் கடைகளில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போல் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான், குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஆய்வுக்கு பின் நியமன அலுவலர் கூறுகையில், ‘சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர காலாவதியான உணவு பொருட்கள், தயாரிப்பு தேதி குறித்த லேபில் இல்லாத பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 1672 கடைகள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதில் 312 கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இக் கடைகளில் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 198 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இறைச்சி கடைகளில் ஆடு வதை செய்யும் இடங்களில் வைத்து வெட்டி முறையாக சீல் வைத்த பின்புதான் விற்பனை செய்யவேண்டும். பொதுமக்களும் இறைச்சியில் சீல் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். இறந்த ஆடுகளை சாப்பிடுவதன் மூலம் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர மஞ்சள் காமாலை மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய் வரும். அதபோல் மீன்கள் எப்பொழுதும் புதியது போல இருக்க ரசாயனம் பூசப்படுகிறது. இது போன்ற மீன்களை வாங்கி சாப்பிடக் கூடாது. இந்திய உணவுபாதுகாப்பு ஆணையத்திடம் என்ஓசி வாங்காமல் திருப்புவனம், சிங்கம்புணரி, இளையாங்குடி பகுதியில் செயல்பட்ட மூலிகை குடிநீர் உற்பத்தி நிலைகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. உணவு பொருட்கள் விற்பனை, தயார் செய்யும் நிறுவனங்கள் வரும் டிசம்பர் 4 ம் தேதிக்குள் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் பதிவு மற்றும் உரிமம் பெற
ஷ்ஷ்ஷ்.யீssணீவீ.ரீஷீஸ்.வீஸீ
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். உணவு பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 04575 243725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

No comments:

Post a Comment