Aug 30, 2013

ஏ.எஸ்.பி.,க்கு புழுக்கள் கலந்த குடிநீர் சப்ளை போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்

சேலம்: ஏ.எஸ்.பி., வீட்டுக்கு புழுக்களுடன் கூடிய குடிநீர் கேன் சப்ளை செய்த, அங்கீகாரம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்தார்.
சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி.,( இணை கண்காணிப்பாளர்) சீரோஷ்குமார் தாகூர். இவரது வீடு சேலத்தில் உள்ளது. நேற்று ஏ.எஸ்.பி., சீரோஷ்குமார் தன் வீட்டுக்கு சுத்திகரிப்பு செய்த கேன் குடிநீர் வாங்கினார். அந்த கேனை சோதனை செய்தபோது, குடிநீருக்குள் புழுக்கள் கலந்திருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ஏ.எஸ்.பி., மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, குடிநீர் கேன் எந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சேலம், நெத்திமேட்டில் பெயர் பலகை, அங்கீகாரம் எதுவும் இன்றி போலியான ஒரு சுத்திகரிப்பு நிலையம் இயங்குவதும், அங்கிருந்து குடிநீர் கேன் சப்ளை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைத்தனர்.
இன்று நெத்திமேட்டில் இயங்கிய போலி குடிநீர் சுத்திரிப்பு நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment