Aug 30, 2013

2,500 டன் கெட்டுப்போன பட்டாணி பருப்புடன் குடோனுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை


தூத்துக்குடி, ஆக.30-தூத்துக்குடியில் உள்ள தனியார் குடோனில், கெட்டுப்போன 2 ஆயிரத்து 500 டன் ஆஸ்திரேலியா பட்டாணி பருப்பை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.பட்டாணி பருப்புதூத்துக்குடியில் மதுரை பைபாஸ் ரோடு அருகில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா பட்டாணி பருப்பு 3 ஆயிரத்து 500 டன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பட்டாணி பருப்பு இறக்குமதி செய்த போது, சரிவர கையாளப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாணி பருப்பு கெட்டுப்போக தொடங்கியது. பின்னர் துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.சோதனைதகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சுமார் 2 ஆயிரத்து 500 டன் பட்டாணி பருப்பு கெட்டுப்போன நிலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் 1000 டன் பட்டாணி பருப்பு விற்பனைக்காக சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.குடோனுக்கு ‘சீல்’ வைப்புஉடனடியாக அதிகாரிகள் சாக்குப் பைகளில் இருந்த பட்டாணி பருப்பு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளதா?, என்பதை ஆய்வு செய்வதற்காக மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அந்த குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment