Jul 31, 2013

சேலத்தில் இயங்கும் "ஃபாஸ்ட்ஃபுட்' கடைகளில் சுகாதாரமில்லை: பண மழையில் நனையும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

சேலம்: சேலம் மாநகராட்சியில், ரோட்டோர இறைச்சி கடைகளை தொடர்ந்து, உடல் நலத்துக்கு, தீங்கு விளைவிக்க கூடிய வகையில், தயார் செய்து விற்பனை செய்யப்படும், "ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளுக்கு, அதிகாரிகள், செக் வைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சியில், ஆடுகளை அறுக்க, வ.உ.சி., மார்க்கெட், மணியனூர் ஆகிய இடங்களில், இறைச்சி கூடாரங்கள் செயல்பட்டு வருகிறது. கறிக்கடை வியாபாரிகள், ஆடுகளை, இறைச்சி கூடாரங்களுக்கு அழைத்து வந்து, சுகாதாரத்துறை அதிகாரிகளின், அனுமதி பெற்று, அங்கேயே அறுத்து, கழிவுகளை அகற்றிவிட்டு, சுகாதாரமான முறையில், கறிகளை விற்பனை செய்ய வேண்டும்.
மாநகரில், இறைச்சி கடைகளின் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரித்துள்ளது. இறைச்சி கடை நடத்தும் பலர், விதிமுறைக்கு புறம்பாக, ரோட்டிலேயே ஆடுகளை அறுத்து, சாக்கடை உள்ளிட்ட சுகாதாரசீர்கேடான இடங்களில், வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.சில்லி சிக்கன் என்ற பெயரில், தரமற்ற எண்ணெயில் பொரிக்கப்படும் சிக்கனை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள், "பண மழையில்' நனைவதால், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.சமீபத்தில், கறிக்கடைகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், அஸ்தம்பட்டியில் இருந்து ஐந்து ரோடு வரை, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த, 100 க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்படுத்தியது. அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது."சுகாதாரமற்ற முறையில், தொடர்ந்து கறி விற்பனை செய்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.தற்போது, கறிக்கடைகளை காட்டிலும், "ஃபாஸ்ட் ஃபுட்' என்ற பெயரில், தரமற்ற வகையில் தயார் செய்யப்படும், கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஃபாஸ்ட்ஃபுட் கடைகளில், கோபி மஞ்சூரியன், சில்லி கோபி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று பல்வேறு வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய, அனைத்து வகையான உபகரணங்களும், இதில், சேர்க்கப்படுகிறது.இதனால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மாநகரில், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.வணிக வளாகங்களில் மட்டும் செயல்பட்டு வந்த, "ஃபாஸ்ட் ஃபுட்' கடைகள், இன்று வீதிக்கு இரண்டாக முளைத்துள்ளது. முற்றிலும், சுகாதாரமற்ற முறையில், இயங்கி வரும் இவற்றையும், கறிக்கடைகளை அப்புறப்படுத்தியது போல, அகற்ற, சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி நல அலுவலர் (பொறுப்பு) மலர்விழி கூறியதாவது:சுகாதாரமற்ற முறையில், ஃபாஸ்ட் ஃபுட் விற்பனை செய்வது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி, அனுராதாவிடம் ஆலோசனை செய்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment