Jul 31, 2013

திருவாரூரில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருள்கள் அழிப்பு

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பொருள்கள் அழிக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், ரூ. 1.32 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும், வலங்கைமான் பகுதியில் ரூ. 18,000 மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கலப்பட டீ தூளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் திருவாரூர் நெய்விளக்குத் தோப்பு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு பள்ளத்தில் போட்டு மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன், புகையிலைப் பொருள்கள் அழிப்பு அலுவலர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல் தெரிவிக்கலாம்: பான் மசாலா, குட்கா பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கீழ்காணும் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
உணவுப் பாதுகாப்பு அலுவலகம் 0466-220034.
முத்துபேட்டை எஸ். அன்பழகன் 9443744811, கூத்தாநல்லூர், மன்னார்குடி கே. மணாழகன் 868980725, திருவாரூர் நகரம் எம். பால்சாமி 9894924690, திருவாரூர் வட்டம் எழில் சிக்காயராஜா 9865689838, மன்னார்குடி வட்டம் ரெங்கராஜன் 9361888388, குடவாசல் வட்டம் லோகநாதன் 9361984400, திருத்துறைப்பூண்டி வட்டம் விஜயகுமார் 9842307869,கோட்டூர் செல்வக்குமார் 9361444844, வலங்கைமான் எஸ். குருசாமி 9943331001, கொரடாச்சேரி, நீடாமங்கலம் செந்தில்குமார் 9788683354, நன்னிலம் லோகநாதன் 9842620977.

No comments:

Post a Comment