Jul 31, 2013

சேலத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், ஜூலை.30-சேலத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புகையிலை பொருட்கள்தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜிக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் திருமூர்த்தி, ஜெகநாதன் உள்பட அதிகாரிகள் சேலம் செவ்வாய்பேட்டை சந்தைபேட்டையில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றனர்.ரூ.50 ஆயிரம் மதிப்பிலான..பின்னர் அதிகாரிகள் அங்கு இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த குடோனின் உரிமையாளர் மதுரை சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் குடோனுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மேலும் குடோனில் இருந்து வாய் நறுமண பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாதிரி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் இதுபோன்ற குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதை அவர்கள் மறைமுகமாக கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ கண்டிப்பாக அவர்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோன்ற பொருட்களை லாரிகளில் ஏற்றி வரக்கூடாது. அவ்வாறு ஏற்றி வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment