Jul 31, 2013

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு

சேலம்: சேலத்தில் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்து, நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம், போதை வஸ்து விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில், கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களில், சேலம் செவ்வாய்ப்பேட்டை, குகை, ஜங்ஷன், அம்மாப்பேட்டை, சின்ன கடை வீதி உட்பட மாநகராட்சி பகுதியில் கைப்பற்றப்பட்ட, புகையிலை உள்பட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகள், பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சேலம் டி.ஆர்.ஓ., செல்வராஜ், நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகளை பார்வையிட்டார்.
அதன் பின், அவற்றை அழிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி, சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள், போதை வஸ்துகளை எருமாபாளையம் குப்பை மேடு பகுதிக்கு கொண்டு சென்று, தீயிட்டு அழித்தனர்.

No comments:

Post a Comment