Jun 1, 2015

ரசாயன கலப்பால் மேகி நூடுல்சுக்கு தடை: உ.பி., அரசு அதிரடி

லக்னோ:'மேகி நூடுல்சில்' அளவுக்கு அதிகமான ரசாயனம் கலந்திருப்பதை உத்தரபிரதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து நூடுல்சுக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்தது. மேலும் இந்த நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தடையை மீறி வணிக நிறுவனங்களில் நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து லக்னோ, மொரக்கோபாத், கோண்டா, கன்னாஜ், ஜாவுலான், மீரட் ஆகிய இடங்களில் உள்ள வணிகநிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, 'மேகி நூடுல்சை' பறிமுதல் செய்தனர்.
வணிகர்கள் எதிர்ப்பு:அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள், நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் சிறு வணிகர்களை துன்புறுத்துவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனிடையே சில தன்னார்வ அமைப்புகள் நூடுல்சுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லக்னோ மற்றும் அலகாபாத்தில் போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கடந்த மார்ச் 10ல் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment