Sep 25, 2014

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் அரியலூரில் பறிமுதல்



அரியலூர், செப். 24:
அரியலூரில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.
நேற்று அரியலூர் சப்.கலெக்டர் சந்திரசேகரன் சாகமூரி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று அரியலூர் பஸ் நிலையம், எம்பி கோயில் தெரு, சின்னக்கடை தெரு, சத்திரம், மாதா கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பெட்டிக்கடை, மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பல்வேறு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அழிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இந்நிகழ்ச்சியில், உதவியாளர்கள் ஸ்டாலின்பிரபு, நேர்முக உதவியாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment