Sep 25, 2014

பொன்னமராவதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அழிப்பு



பொன்னமராவதி, செப்.25:
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.
பொன்னமராவதி பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆணையின்படியும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அறிவுறுத்துதலின் பேரிலும், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆலோசனையின்படியும், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா அம்பலகாரர் முன்னிலையிலும் வரித்தண்டலர் கேசவன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் குடிநீர் பணியாளர் பாபு, துப்புரவு பணியாளர்கள் குழுவாக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பைகள் மற்றும் கப்புகள் சுமார் 102 கிலோ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மறு உபயோகத்திற்கு பயன்படாத வகையில் அழிக்கப்பட்டது.
மேலும் ரூ.7ஆயிரத்து 500 மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சௌந்திரராஜன் ஆகியோரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment