Sep 25, 2014

நூடுல்ஸ்

வீடுகளில் சமைக்கும் உணவுகளில், மிகவும் சுலபமாக இரண்டே நிமிடங்களில் தயார் செய்யும் உணவுதான் நூடுல்ஸ். இதனை, வாரத்தில் ஒருநாள் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் உள்ளது. 
குழந்தைகள் விரும்பிக் கேட்டால் பெற்றோர்களுக்கு செய்து கொடுக்கவும் எளிதான உடனடி உணவாக நூடுல்ஸ் மாறிப்போய் விட்டது. இத்தனை கவர்ச்சியான விளம்பரங்களில் வரும் நூடுல்ஸ் அதன் சுவைக்கு நிகரான அபாயங்களையும் கொண்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்ப்பது உடல்நலத்துக்கு பெரும் தீங்கு இழைக்கக் கூடியது. 
நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல் செய்துவிடுகிறது. இதில் மூளைச்செல்களை உருவாக்கும் முக்கிய வைட்டமின்களும் அடங்கும். இது தவிர ஹார்மோன்களை சரியாக சுரக்கச்செய்து அழகான சருமத்தையும் கேசத்தையும் பராமரிக்க கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உதவுகின்றன.
இவையனைத்தும் மெழுகு சேர்க்கப்பட்ட நூடுல்ஸ்களை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன. நூடுல்ஸ் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உடல் பருமன், இடுப்பிலும் வயிற் றிலும் தேவையற்ற சதைகளை உருவாக்குதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், மூளைத்தாக்கு நோய் (ஸ்ட்ரோக்), நீரிழிவு போன்றவை எளிதாக வருகின்றன. 
நூடுல்ஸில் உள்ள மைதா, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது. நூடுல்ஸில் வெள்ளை நிறத்துக்காக சேர்க்கப்படும் பிளீச்சிங் பொருளான அலோக்ஸான் (alloxan) கணைய சுரப்பிகளில் இன்சுலினை சுரக்கச் செய்வதை பாதிப்படையச் செய்து நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு அலோக்ஸான் பற்றிய விழிப்புணர்வு இல்லை. 
தென்கொரிய ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்தியாவில் பெண்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவதால் அதிக தீமைகள் வருவதைத் தெரிவித்துள்ளது. நூடுல்ஸில் உள்ள ‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை பாதிக்கிறது. இதனால் பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயம் உண்டாம். 
பெரும்பான்மையான மக்களுக்கு இயற்கை தானியங்களால் செய்யப்பட்ட ஆரோக்கியம் தரும் நூடுல்ஸ் கடைகளில் கிடைப்பது தெரிவதில்லை. இயற்கை முறையில் வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி போன்றவற்றால் செய்யப்படுகிற நூடுல்ஸ் இப்போது கிடைக்கின்றன. இவற்றில், உடலுக்குத் தேவையான சத்துக்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி-6, நியாசின், மக்னீசியம் போன்றவை உள்ளன. 
இவை உடலில் தாறுமாறான இன்சுலின் அளவை தடை செய்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டே நிமிடங்களில் தயார் செய்துவிடக் கூடிய இன்ஸ்டன்ட் உணவு உண்மையிலேயே அவசியமானதுதானா, ஆரோக்கிய மானதுதானா என்பதையும் இனி இரண்டு நிமிடங்கள் யோசியுங்கள். நூடுல்ஸில் உள்ள‘பிஸ்பினால் ஏ’ என்ற மூலக்கூறு பெண்களுக்கு ‘பாலிஸிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

டாக்டர் மனு பிரதீஷ்

No comments:

Post a Comment