Jul 4, 2014

விழுப்புரம் மாவட்டத்தில் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் கலெக்டர் சம்பத் தகவல்


விக்கிரவாண்டி, ஜூன் 4:
விழுப்புரம் மாவட்டத்தில் மதிய உணவின் தரம் மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி ஒன்றிய சத்துணவு மைய பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2383 சத்துணவு மையங்கள் செயல்படுகிறது. சத்துணவு அமைப்பாளர்கள் பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும், சமையல் கூடத்தை தினமும் கழுவ வேண்டும், கழிவு நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், உணவு பொருட்கள் ஈரம் படாமல், பூச்சு வண்டுகள் இருந்தால் வாரம் ஒரு முறை வெயிலில் உலர வைக்க வேண்டும், அரிசி, பருப்பு, காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும், சமைத்த உணவினை மூட வேண்டும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய மூவரும் சமைத்த உணவினை சாப்பிட்டு பிறகு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியத்தில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் உதவி இயக்குநர் சரோஜா தேவி, வட்டாட்சியர் ரவிக்கண்ணன், ஒன்றிய சேர்மன் சுமதிநாகப்பன், பிடிஓக்கள் ரவிச்சந்திரன், கோபாலக்கிருஷ்ணன் மற்றும் துணை பிடிஓக்கள், சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. மண்டல அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். சார் ஆட்சியர் சுபோத்குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதில் உணவு பாதுகாப்பு அலுவ லர் சரவணன் பேசினார். கூட்டத்தில் சார்ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் காமாசிங், வட்டார மருத் துவ அலுவலர் பூபேஷ், உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சரவணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் பகண்டைகூட்ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் :
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சத்துணவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஒன்றியகல்விக்குழு தலைவர் மகாலட்சுமி ஏகாம்பரம் தலைமை தாங்கினார். சத்துணவு மேலாளர் மாயவேல் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஜெயச்சந்திரா வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் (பொ) முரளீதரன் சத்துணவு பணியாளர்களின் கடமைகள் குறித்து விளக்கினார். 96 மையங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் சத்துணவு அலுவலக உதவியாளர் சுந்தர்ராஜ், சத்துணவு கணினி உதவியாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment