Jun 30, 2014

மாம்பழங்களை பழுக்க வைக்க சுகாதாரமான புதிய முறை


கன்னியாகுமரி, ஜூன் 30:
கன்னியாகுமரி தோட்டக்கலை அலுவலர் குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாம்பழங்கள் அனை த்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் அல்போ ன்சா, பங்கனப்பள்ளி, ஹிமாயுதின், நீலம், பெங்க ளூரா, கலப்பாடு போன்ற ரகங்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. அரசு தோட்டக்கலைப் பண்ணை யிலும் இந்த ரகங்கள் பயிர் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை சுகாதார முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறைப்படி பழுக்க வைக்கும் மாம் பழங்கள் சுவையாகவும், மணம் உள்ளதாகவும் இருப்பதுடன் இயற்கையான நிறத்துடன் காணப்படும்.
இந்த புதிய முறைப்படி மாம்பழங்களை பழுக்க வைக்க காற்று புகாத அறைகளில் எத்திரல் என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து 5 இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த கலவையில் இருந்து எத்திலின் வாயு அதிக அளவில் வெளி வர உதவி செய்யும் வகையில் ஒரு லிட்டர் கலவைக்கு 2 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மருந்தை கலக்க வேண்டும். மாம்பழங்களின் ரகங்களைப் பொறுத்து 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் நன்றாக பழுத்த மாம்பழங்களைப் பெற லாம்.
இம்முறையில் பழுக்க வைக்கப்படும் மாங்கனிகளுக்கு இயற்கையான பழ மணம் வரும். இம்முறையில் பயன்படுத்தப்படும் எத்திரல் வளர்ச்சி ஊக்கி உர விற்பனை நிலையங்களிலும், சோடி யம் ஹைட்ராக்சைடு சாதா ரண இரசாயன பொ ருள் விற்பனை நிலையங்க ளிலும் கிடைக்கும். இவ்வாறு தோட்டக்கலை அலுவலர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment