Jun 24, 2014

கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் காலாவதியான குளிர்பானம் குவிப்பு

கோவை, ஜுன் 24:
கோவை வாலாங்குளம் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட காலாவதியான குளிர்பான பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடந்தன.
கோவை வாலாங்குளபாலத்தின் அடியில் 2011ம் ஆண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டு கிடந்தன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 180 மில்லி பிடிக்க கூடிய மாம்பழ குளிர்பானங்களை மர்ம நபர்கள் வேன் அல்லது லாரி மூலமாக கொண்டு வந்து கொட்டி சென்றதாக தெரிகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், பாலத்தின் அடியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். சிறுவர்கள் அப்பகுதிக்கு விளையாட செல்லும் போது அந்த குளிர்பானத்தை குடிக்கும் ஆபத்தும் உள்ளது.
குளிர்பான பாட்டிலில் குறிப்பிடப்பட்ட பெயர் கேரளாவில் விற்கப்படும் குளிர்பான வகை என தெரிகிறது. எனவே, கேரளா வில் இருந்து குளிர்பான நிறுவனம், அல்லது ஏஜென்சியை சேர்ந்த ஊழியர்கள் இரவு நேரங்களில் வாகனம் மூலமாக எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் உடனடியாக குளிர்பானங்களை அப்புறப்படுத்தி சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment