Jun 2, 2014

பிளாட்பார உணவகங்களில் ஆய்வு நடத்தப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

கரூர், ஜூன்2:
கரூர் நகராட்சி பகுதிகளான ஜவஹர் பஜார், தாந்தோணிமலை, ராய னூர், மனோகரா கார்னர், வெங்கமேடு, பசுபதிபாளை யம், காந்திகிராமம் உட்பட பல்வேறு பகுதிகளில் பிளாட்பார உணவகங்கள் அதிகளவு உள்ளன.
டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பஸ் பாடி போன்ற முக்கிய நிறுவனங்கள் கரூரை சுற்றிலும் செயல்பட்டு வருவதால் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றி செல்கின்றனர். மேலும், கருர் நகரப்பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நகராட்சி பகுதிகளில் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர். முக்கிய தொழில் நகரம் என்பதால் கரூருக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற பயணிகள் மற்றும் பொதுமக்களை கவனத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பிளா ட்பார உணவகங்கள் செய ல்படுகின்றன. இந்த கடை களில் சிக்கன் பிரியாணி, இட்லி, தோசை மற்றும் மதிய நேரங்களில் சாப்பாடு போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினமும் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தொழிலாளர்கள் இதுபோன்ற கடைகளுக்கு சென்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பிளாட்பார உணவகங்கள் திறந்த நிலையிலேயே சுகாதாரமற்ற நிலையில் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. மேலும், அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளின் அருகிலேயே பிளாட்பார கடைகள் செயல்படுகின்றன. கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? சுத்தமான முறையில் உணவுகள் தயார் செய்யப்படுகிறதா? என்பதை நகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து அவர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமாக மனோகரா கார்னர் உட்பட முக்கிய பகுதிகளில் பீப் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பீப் பிரே போன்ற உணவுப் பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் இக்கடைகளில் அதிகளவு வாடிக்கையாளர்கள் சென்று வருகின்றனர். இந்த கடைகளிலும் தரமற்ற எண்ணையை உபயோகப்படுத்தியே அசைவ அயிட்டங்கள் தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் பயன்படுத்தும் தொழிலாளர்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாட்பார பகுதிகளில் செயல்படும் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment