Jun 2, 2014

மாவட்டந்தோறும் உணவு பொருள் பரிசோதனை கூடம், நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜூன் 2:
மாவட்டந்தோறும் உணவு பொருள் பரிசோதனை கூடம் அமை க்க வேண்டும் என்று நுகர் வோர் குழுக்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறை வேற்றி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (பெட் காட்) பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. பெட் காட் தலைவர் வக்கீல் பாஷ் யம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நுகர் வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர், பணியாளர்கள் இடங்களை தமி ழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ் நாட்டில் பகுதி நுகர்வோர் குறைதீர் மன்றமாக செயல் பட்டு வரும் புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணமாலை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள குறைதீர் மன்றங் களை முழுநேர நீதிமன்ற மாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் செயலிழந்ததோடு, உரிய வழக்கு கள் பதிவு செய்யாமல் உள் ளதால் தமிழகத்தில் அதிக அளவு கலப்படமான உண வுகள் விற்பனையாகிறது. இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண் டும். உணவு பொருட்கள் பரிசோதனை கூடங்கள் தமிழகத்தில் மண் டல அளவில் 6 இடத்தில் மட்டுமே உள் ளது. இதனை மாவட்டந்தோறும் தொட ங்க வேண் டும்.
தமிழகத்தில் தற்போது அயோடின் கலக்காத உப்பு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு சட்டப் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து நீராதாரங்களை அளிக்கும் ஆறுகள், ஏரிகளில் தற்பாது அதிக அளவு கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டுள் ளது. தொழிற்சாலைகள் மூலம் கழிவுகள் கலப்பதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் நீராதாரத்திற்கென தனி அமைச்சர் உருவாக்க வேண்டும்.
தனியார் மற்றும் மெட் ரிக் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காத பள்ளிகள் அங்கீகாரத்தினை ரத்து செய்வ தோடு, அந்த பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண் டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது.
முன்னதாக கூட்டத்தில் கூட்டமைப்பு தலைவராக நெல்லை பிரபாகர், பொதுச்செயலாளராக சேலம் அசோகன், பொருளாள ராக சென்னை செல்வராஜ், துணைத்தலைவர்களாக வெங்கடாசலம், வீராசாமி, திருநாவுக்கரசு மற்றும் இணை செயலாளர்கள், 32 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள், செயற் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment