Jun 2, 2014

பாபநாசம் கடைவீதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு குட்கா பொருட்கள் கண்டறிந்து அழிப்பு

பாபநாசம், ஜூன்1:
பாபா நாசம் கடைவீதியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட குடிகா பொருட்களை கண்டறிந்து அழித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் சுப்பையன் உத்தரவின் பேரிலும், மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணியன் வழி காட்டுதலின் பேரிலும், பாபநாசம் அடுத்த ராஜகிரி, பண்டார வாடை, சரபோஜிராஜபுரம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை தடுப்புச் சட்டத்தின்படி புகையிலை விற்பனை, பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச் செய்யப்பட்டது. சுகாதாரத் துறையினர் இப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடைச் செய்யப் பட்ட புகையிலைப் பொருட் கள் கண்டறிந்து அழித்தனர். ரூ3,300 அபராதம் விதிக்கப் பட்டது. இதில் வட்டார மருத் துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா, டாக்டர் வசந்தகுமார், பாபநாசம் எஸ்ஐ முருகேசன், போலீசார் கார்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ் கரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், செல் லப்பா, நாடிமுத்து, மனோ கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பாபநாசம் பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரூ2,800 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் டாக்டர் கார்த்திகேயன், பாபநாசம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, பாபநாசம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ அன்பழகன், காவலர் சாமிநாதன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் அன்புதாஸ் உள்பட கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment