Jun 21, 2014

சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரசாயன பொருள் பயன்படுத்திய சேகோ ஆலைக்கு சீல் விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு

சேலம், ஜூன் 21:
சேலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரசாயன பொருட்கள் பயன்படுத்திய சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், சில ஆலை கள் ஜவ்வரிசி தயாரிக்க ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாகவும், மர வள்ளி கிழங்கு மாவுக்கு பதிலாக மக்காச்சோள மாவை பயன்படுத்துவதா கவும் புகார் எழுந்தது. ரசாய னம் கலக்கப்பட்ட ஜவ்வரிசியை உண்பதால் பொது மக்களும், மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயி களும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள், வியாபாரிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட் டம் நடந்தது. இதில், ஜவ் வரிசி தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும், மரவள்ளி கிழங்கு மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், உணவு பாது காப்பு துறை மூலம் சேகோ ஆலைகள் இயங்க வேண் டிய விதிமுறைகள் குறித்தும், ஜவ்வரிசி தயாரிக்க வேண் டிய விதிமுறைகள் குறித்தும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சேலம் ஜாகீர்ரெட்டிபட்டியில் தங்கராஜ், செல்வம் என்பவர்களுக்கு சொந்தமான தனியார் சேகோ ஆலையில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அந்த ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க அமிலம், ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அந்த ஆலை உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஜவ்வரிசி உற்பத்தியை தடை செய்து, ஆலைக்கு சீல் வைத்தனர். அங்கிருந்த ரசாயன பொருட்களை அழித்த அதிகாரிகள், அங்கு தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி மாதிரியை, உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து டாக்டர் அனுராதா கூறுகையில், ‘‘இந்த ஆலையில் ஜவ்வரிசி தயாரிப்பின் போது, ஹைட்ரஜன் பெராக்சைடு, பீளிச்சிங் திரவம் ஆகிய ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜவ்வரிசி உற்பத்தியை தடை செய்து ஆலைக்கு சீல் வைத்துள்ளோம். அரைக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு மாவை வெளியில் இருந்து விலைக்கு வாங்கி, ஜவ்வரிசி தயாரித்து வந்தனர். அதனால் மக்காச்சோள மாவு கலந்திருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இங்கு தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி மாதிரியை, சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு கிடைக்க 14 நாட்கள் ஆகும். அதன் அடிப்படையில், ஆலை உரிமையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்,’’ என்றார்.
விவசாயிகள் மற்றும் பொது மக்களின் புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாவட்டத்திலேயே முதல் முறையாக இப்போது தான் சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment