Jun 8, 2014

திருச்சியில் 10,000 கிலோ கார்பைட் மாம்பழம் வியாபாரிகள் மீது விரைவில் வழக்கு அதிகாரிகள் தகவல்

திருச்சி,ஜூன்6:
தமிழ கத்தில் மேமாதம் தொ டக்கத்தில் மாம் பழசீசன் தொடங்கி, ஜுன் கடைசி வரையி லும் இருக்கும். ஒவ் வொரு சீசனிலும் அறு வடை செய்த மாங்காய் களை பழுக்க வைக்க வியாபாரி கள் பலர் கார்பைட் கல்லை பயன்படுத்துவது வழக் கம். இந்த பழங்களை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கும். எனவே இந்த கல்லை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் மற்றும் வரத்து குறைவாக இருக்கும் காலத்தில் மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க காலதாமதம் ஆகும் என்பதால் செயற்கை முறையில் பழுக்க வைக்க ஒரு சில வியாபாரிகள் குறுக்கு வழியில் கார்பைடு கெமிக்கலை பயன்படுத்தி வருவது வழக்கம். எனவே ஒவ்வொரு வருடமும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் மாம்பழக் கடைகள் மற்றும் குடோன்களை ஆய்வு செய்வதோடு கார்பைட் கல் மற்றும் மாம்பழங்களை கைப்பற்று அழிப்பார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்ததில்லை. சம்பந்தப்பட்ட குடோன்களுக்கும் இதுவரை யிலும் சீல்களும் வைக்கப்பட் டது கிடையாது.
ஒவ்வொரு வருடமும் சோ தனை நடத்தும் போதெல்லாம் வியாபாரிகள் கார்பைட் பயன் படுத்தக் கூடாது. மீறி பயன் படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனாலும் வியாபாரிகள் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் துணிச்சலாக கார்பைட் கல் பயன்படுத்தி வருகின்றனர்.
கார்பைட் கல் மற்றும் கார் பைடு பவுடர் வைத்து மாம் பழத்தை பழுக்க வைப்பதால் இதன் ரசாயனம் பழங்களுக்குள் ஊடுருவி சென்று விடுகிறது. அதை சாப்பிடுவர்களுக்கு வயிற்று உபாதைகள் மற்றும் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவேதாடு மனித உயிருக் கும் ஆபத்தையும் விளைவிக்கி றது. மாங்காய் இயற்கையாக பழுப்பதற்கும், இவ்வாறு செயற்கையாக பழுக்க வைப் பதற்கும் உள்ள வித்தி யாசத்தை பொதுமக்க ளால் கண்டு பிடிக்க முடி யாது. இதனால் வியாபாரிகள் தைரிய மாக இந்த செயலில் ஈடுபட்டு வருகி றார்கள். இந்த கார்பைட் கல்லை கையாளுவ தால் வாய்ப்புண், மூக்கு எரிச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு இறைப்பு, கண்எரிச்சல் உள்ளிட்ட கேடுகளும் உண்டாகிறது.
மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு பின் மே முதல் வாரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப் பாட்டுத்துறை துறை அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையி லான குழுவினர் திருச்சி காந்தி மார்க்கெட்டிலும், 21ம்தேதி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை யில் கொண்ட குழுவினர் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை காவிரி கரையோரத்திலும், ஜுன் 3ம்தேதி மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் தலைமை யிலான குழுவினர் காந்திமார்க்கெட்டிலும் சோதனை நடத்தினர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 10ஆயிரம் கிலோ கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கார்பைடு மாம்பழங்களை அரிய மங்கலம் குப்பை கிடங்கில் கொட்டி உடனடியாக அழிக்கப்பட்டன.
மனித உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய இந்த கார்பைட் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று நுகர்வோர் அமைப்புகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அதிகாரிகள் விளக்கம்:
இது குறித்து உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதார நல அதிகாரிகள் தரப் பில் தெரிவித்ததாவது: கார் பைட் மாம்பழங்கள் பறிமுதல் மற்றும் அதை அழிப்பது தான் சட்ட நடை முறையில் இருந்து வரு கிறது. குடோன்களில் நேரிடை யாக சோதனை நடத்தப்பட்ட தில் மாம் பழங் களை விரைவில் பழுக்க வைக்க கால்சியம் கார்பைட்கல் உள்ளிட்டவை ஆதாரங் களுடன் கைப்பற்றப் பட்டு உள்ளது. இது தொடர் பான அறிக்கையும் கலெக்டரி டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆதாரத்துடன் கைப்பற்றப் பட்டு இருப்பதால் சம்பந்தப் பட்ட வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அல்லது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செ யலாம் என சட்ட நடை முறையில் உள்ளது. கலெக் டர் உத்தரவுக் காக காத்திருப்ப தாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment