May 26, 2014

10 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

நாமக்கல், மே 24: 
நாமக்கல் அருகே உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் 
10 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா உள்ளி ட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா ஆகிய போதை பொருட்களின் விற்பனையை தடுக்க கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில், உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். 
நேற்று உணவு பாதுகாப்பு மாவட்ட நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ராமசுப்பிரமணியன், சங்கரநாராயணன், செந்தில், நரசிம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மோகனூர் அருகே வளையப்பட்டியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, பல்வேறு கடைகளில் 10ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு தெரிவித்தனர். மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. 
இச்சோதனையில், வளையப்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உள்ளதா என ஆய்வுசெய்யப்பட்டது. ஆய்வின்போது ஒரு வியாபாரியின் வீட்டில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 50 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment