Dec 2, 2013

ஐஎஸ்ஐ முத்திரையுடன் சுகாதாரமற்ற குடிநீர் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டம்

பரமக்குடி, டிச. 2:
பரமக்குடி நகரில் சுகாதார மற்று பாக் கெட் குடிநீர் விற்பனை அதிகரித்திருப்பதுடன், டீத் தூள், பருப்பு உள்ளிட்ட உணவு பெருட்களும் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதாக ஒப்புக் கொண்டு ள்ள அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் பரமக்குடி பரபரப் பான நகரமாகும். இங்கு அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவ மனை உள்ளிட்ட சில தனி யார் மருத்துவமனை உள்ளன.
மேலும், இங்கிருந்து பல் வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பஸ் போக்குவரத்தும் உள்ளது. அதனால் நாள் தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான வெளியூர் மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு சுமார் 75 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்ற னர். சிறந்த கல்வி நிறுவனங் கள் பல உள்ளதால் வெளி யூர் மாணவர்கள் அதிகம் படித்து வருகின்றனர்.
இவ்வளவு பெரிய நகர மாக இருப்பதால் குடிநீர் தேவை அதிகரித்து வந்தது. அதனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது.
இருப்பினும் சிறிய கடை முதல் பெரிய கடை வரையில் பாகுபாடு இன்றி குடிநீர் பாக்கெட் மற்றும் ஒரு லிட்டர், இரண்டு லிட் டர் பாட்டில்கள், 30 லிட் டர் கேன்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இவற்றில் சுகாதாரமற்ற குடிநீர் விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாக் கெட்டுகளில் விற்கப்படும் குடிநீர் வாடை அடிப்பதாகவும், தூசுகள் நிறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் உள்ள பாக்கெட்டுகளின் மீது ஐஎஸ்ஐ முத்திரை பதி க்கப்பட்டுள்ளதாகவும் கூற ப்படுகிறது. பரமக்குடியில் மட்டும் ஒரு நாளை க்கு சுமார் 20 ஆயிரம் லிட்டர் அளவிற்கு இது போன்ற குடிநீர் விற்கப்படுவதாக தெரிகிறது.
மேலும், டீத்தூள், பரு ப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட பல அதிரடி சோதனைக ளில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்ட தை கண்டறிந்துள்ள தே இதற்கு உதாரணமாகும். இதை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, முகம்மது ரபிக் கூறுகையில், நகரில் சுகாதாரமற்ற குடிநீர் விற் பனை அதிகரித்துள்ளது. புதுப் புதுப் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த குடிநீ ரால் மக்களுக்கு நோய் பர வும் அபாயம் உள்ளது. அத னால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பரமக்குடி நகராட்சிக்கு உள்ளிட்ட கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்துகிறோம். டீத்தூள், பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களில் கலந்படம் செய்யப்பட்டதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள் ளோம். தற்போது பாக்கெட் குடிநீரில் சுகாதாரம் இல் லை என்ற புகார் வந்துள் ளது. விரைவில் சோதனை நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment