Dec 2, 2013

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை 7 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

திருப்பூர்,டிச.2:
திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்களான பான்பாராக் , புகையிலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்த 7 கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு கடந்த மே 23ம் தேதி முதல் பான்மசாலா, குட்கா,நிக்கோடின் கலந்த அனைத்து புகையிலை வகைகளையும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதாக அறிவித்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ன் கீழ் இவை அனைத்தும் உணவு பாதுகாப்பு மற்றும் நிவாகத்துறை ஆணையரால் தடைசெய்யபட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் தடைசெய்யபட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை விற்பனை செய்யப்பட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகரப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களான பான்பாராக் , புகையிலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,திருப்பூர் ரூரல், தெற்கு மற்றும் மத்திய போலீசார் தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, மங்கலம் ரோடு, கோவில் வழி ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஹான்ஸ், கணேஷ் புகையிலை 160 பாக்கெட்டுகள், பாதன் பாக்கெட்டுகள் 350 உள்பட 510 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாணிக்கம் (50), பெருமாள் (48), சுரேஷ் (35), உள்பட 7 பேர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment