Dec 2, 2013

ரசாயன பவுடர் தடவி இறைச்சி விற்பனை அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை

கரூர், டிச.2:
ரசாயன பவுடர் பயன்படுத்திய இறைச்சி விற்பனையை சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரில் பல்வேறு பகுதியிலும் மாலை நேரத்தில் இறைச்சி கடைகளில் மட்டன், சிக்கன் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பொறித்து வழங்குகின்றனர். பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து இந்த இறைச்சிக்கடைகள் போடப்பட்டு விற்பனை செய்கின்றனர். கோழி, ஆடு, இறைச்சிகளில் கலர் கலரான ரசாயன பவுடரை போட்டு பொறித்து பிளேட்டில் கொடுக்கின்றனர். ரசாயன பவுடர் மட்டுமின்றி இறைச்சியும் சுகாதார கேடாக இருக்கிறது. முதல்நாள் வாங்கிய இறைச்சியை மறுநாள் வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும் பொறிக்கும் எண்ணையை மாற்றுவது கிடையாது. சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment