Dec 9, 2013

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, டிச.9:கோவை 
மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலையோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலையோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலைகளின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 
இதை தொடர்ந்து மாநகராட்சி கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
10 இறைச்சி கடைகளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment