Nov 12, 2013

பள்ளி கல்லூரி அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை, பாக்கு பறிமுதல்

கோபி, நவ.12:
கோபி சப்கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை குறை தீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனு ஒன்றில் கோபி அருகே உள்ள அளுக்குளி, குருமந்தூர், மூனாம்பள்ளி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, தனியார் நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கோபி சப்கலெக்டர் சந்திரசேகர சாகமுரி தலைமையில் நம்பியூர் உணவு பாதுகாப்பு அலுவலர் மணி, கோபி கிராமப்புற உணவு பாதுகாப்பு அலுவலர் மனேகரன், வருவாய் ஆய்வாளர் அதிர்ஷ்டராஜ், குருமந்தூர் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவை பிரிவு, பதி, நம்பியூர், அளுக்குளி, மூனாம்பள்ளி, குருமந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் தனியார் கல்லூரி அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு வகைகளை பறிமுதல் செய்தனர். அதே போன்று கோவை பிரிவில் டீகடைகளில் நடத்திய சோதனையில் சுமார் 5 கிலோ அளவிற்கான கலப்பட தேயிலைத்துளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சப்&கலெக்டர் சந்திரசேகர் சாகமுரி கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு வகைகளை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். இதுகுறித்த நடவடிக்கைக்காக அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment