Nov 12, 2013

ஓமலூர் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு


சேலம், நவ.12-
ஓமலூர் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆலைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வெல்லத்தை மாதிரிக்கு எடுத்து ஆய்வுக்கு அனுப்பபட்டது.
கெமிக்கல் கலப்பதாக புகார்
ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கெமிக்கல், சர்க்கரை போன்றவை கலப்படம் செய்வதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஓமலூர் பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் காம்லாபுரம், பொட்டியாபுரம், ஒட்டத்தெரு, தும்பிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்தனர்.
உரிமையாளருக்கு எச்சரிக்கை
அப்போது ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் போது, சோடியம் பை கார்பனேட், சோடா உப்பு போன்ற கெமிக்கல்களும், சர்க்கரைகளும் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆலை உரிமைகளை எச்சரிகை செய்தனர். மேலும் ஆலைகளில் இருந்து 3 வெல்லம் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்தனர்.இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘ஓமலூர் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கெமிக்கல், சர்க்கரை கலப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அங்கு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அந்த வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு உடையாப்பட்டியில் உள்ள பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வின் முடிவு வந்த பிறகு கலப்படம் செய்த ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.



ஓமலூர் பகுதியில் 30 கரும்பாலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேலம், நவ.12:
சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கரும்பாலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
சேலம் அடுத்த ஓமலூர், காமலாபுரம், பொட்டிபுரம், ஒட்டத்தெரு, தும்பிப்பாடி, சர்க்கரைரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பாலைகளில் வெல்லம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் வெல்லம் வெளிர் மஞ்சள் நிற வர கெமிக்கல் கலப்பதாக சேலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 30 கரும்பாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய் வில் 3 கரும்பாலைகளில் இருந்து வெல்லம் மாதிரி எடுத்து உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு சோதனை அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
கரும்பாலைகளில் வெல்லம் மஞ்சள் நிற வர சல்பர் டை ஆக்சைடு என்ற கெமிக்கல் 70 பிபிஎம் வரை உபயோகிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கரும்பாலைகளில் வெல்லம் வெளிர் மஞ்சள் நிறத்தில் வர சோடியம் பை கார்ப் னேட், சூப்பர் பாஸ் பேட், ஹைப்போ குளோ ரைடு உள்ளிட்ட கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இது போன்ற கெமிக் கலை வெல்லத்தில் சேர்க்கக்கூடாது என்று கரும்பாலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். வெல்லத்தில் கெமிக்கல் சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கரும்பாலை உரிமையாளர்களை அழைத்து விரைவில் ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அனுராதா கூறினார்.

2 comments:

  1. Conditions to be applied for India, not only for omalur,karuppur,vellapatti,kamalapuram. Its kind of threatening the farmers.Relaxtions needed.

    ReplyDelete
  2. சட்டம் இருந்தால் இந்திய முழுவதும் அமுல் படுத்த வேண்டும் சேலத்தில் மட்டும் அமுல் படுத்த கூடாது, அப்படி சேலத்திற்கு மட்டும் அமுல்படுத்தினால் , சேலத்தில் கரும்பு விவசாயத்தை நம்பி வுள்ள சிறு விவசாயிகள் பாதிகபடுவர்கள். ஏன் என்றல் , சேலத்தில் சர்க்கரை ஆளை கிடையாது.

    ReplyDelete