Oct 23, 2013

பான் மசாலா- குட்காவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

அனைத்து விதமான பான் மசாலாக்கள் மற்றும் குட்காவை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முறையீடு செய்தது.
நாடு முழுவதும் குட்கா-பான் மசாலா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 
அதிலும் குறிப்பாக 35 சதவீத இளைஞர்கள் குட்காவுக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
பான் மசாலா, குட்காவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி, ""அனைத்து விதமான பான் மசாலா-குட்காவை தடை செய்ய உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்றார். 
மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, "" கட்டுப்பாடுகளை மீறி பான் மசாலா-குட்கா நிறுவனங்கள் அவற்றை தயாரிக்கின்றன. 
35 சதவீத இளைஞர்கள் இப்பொருள்களுக்கு அடிமையாகி இருப்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது'' என்று தெரிவித்தார். 
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம், பான்மசாலா, குட்காவுக்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment