Nov 19, 2016

64 குடிநீர் நிறுவனங்கள் மூடல் :ஊ குடிக்க தகுதியற்றது என 'திடுக்'

தமிழகத்தில், 64 நிறுவனங்களின் குடிநீர், 'குடிப்பதற்கு உகந்ததல்ல' என, பரிசோதனை முடிவில் தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், பாட்டில் மற்றும் கேன் குடிநீரின் தரம் குறித்து, தொடர் புகார்கள் எழுந்தன. பசுமை தீர்ப்பாயம், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி, இரு மாதங்களுக்கு முன், மாநிலம் முழுவதும் உள்ள, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள், நேற்று வந்தன. இதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள, 64 நிறுவனங்களுக்கு, குடிநீர் தயாரிப்பை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை உணவு பாதுகாப்பு துறை அலுவலர், விஜய் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், 10 நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், ஏழு நிறுவனங்களின் மாதிரிகள், குடிக்கத் தகுந்ததல்ல என, முடிவுகள் வந்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள், நிறுவனங்களை மூடியுள்ளனர். இதே போல், தமிழகம் முழுவதும், 64 நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கோர்ட்டில் வழக்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment