Jul 7, 2016

கஞ்சா சாக்லேட் விற்பனை? பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

மேட்டூர்: மேட்டூரில், பள்ளிகள் அருகே, கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கஞ்சா சாக்லேட் விற்பனையை தடுக்க, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேட்டூர், சாம்பள்ளி மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, குஞ்சாண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் நேற்று, மேட்டூர் நகராட்சி, நங்கவள்ளி, கொளத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். ஆனால், கடைகளில் கஞ்சா சாக்லெட் எதுவும் இல்லை. எனினும், 30 கடைகளில் ஆய்வு நடத்திய அலுவலர்கள், சட்டவிரோதமாக விற்ற, 5,000 ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

No comments:

Post a Comment