Jul 7, 2016

போதை வஸ்து விற்றால் கிரிமினல் வழக்கு: மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல்

நாமக்கல்: 'தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான் பராக் போன்ற புகையிலை மற்றும் போதை வஸ்துகளை விற்பனை செய்தால், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்' என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் கடைவீதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களையும், குழந்தைகளின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஜெல்லி, தரமில்லாத மற்றும் காலாவதியான மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் ஆய்வு செய்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், குழந்தைகளுக்கான காலாவதியான பிஸ்கட், ஜெல்லி, பிராண்டட் இல்லாத மிட்டாய்கள் விற்றாலும், கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment