Jul 16, 2015

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மவுனம் ஏன்?



அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க தயங்கறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''மேகி நுாடுல்ஸ் விவகாரம் வந்ததும், உணவு பாதுகாப்பு அதிகாரிங்க, அதிரடியா ஆய்வு நடத்தினா... உடலுக்கு கேடு உண்டாக்குற கெமிக்கல் இருக்குன்னு கண்டுபிடிச்சா... ஆறு கம்பெனிகளோட, நுாடுல்ஸ் விற்பனைக்கு கவர்ன்மென்ட் தடை போட்டுடுத்து...
''இன்னும், நிறைய பாக்கெட் உணவுகளை சோதனை செஞ்சா... கூடுதலா ரெண்டு நுாடுல்ஸ் நிறுவனங்களோட தயாரிப்புல, கெமிக்கல்ஸ் அதிகம் இருக்கிறத கண்டு பிடிச்சுட்டா... ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்காம, கமுக்கமா இருக்கா... எல்லாம், மேலிட உத்தரவுன்னு சொல்றா ஓய்...'' எனக்கூறி முடித்தார் குப்பண்ணா. ''அப்ப... பொதுமக்கள் வயித்துல ரசாயனம் தான்னு சொல்லுங்க...'' என்ற அந்தோணிசாமி, கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பினார்.மற்றவர்களும் நடையைக் கட்டவே, பெஞ்ச் அமைதியானது!

No comments:

Post a Comment