Jul 16, 2015

நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவை பற்றியது:

சிறிய கடை முதல் பெரிய சூப்பர் மார்கெட் வரை மிகவும் பரவலாக எல்லா மூலை முடுக்கிலும் இப்போ எளிதாக கிடைக்கும் ஒரு பொருள் Wet flour எனப்படும் இட்லி தோசை மாவு தான்...

கடந்த 10 வருடத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அது ஒரு பெரிய வரபிரசாதமாக மனதில் ஆழ பதிந்துவிட்டது...ஆனால் உண்மையில் இது ஒரு சாபமே.
அதிகபட்சம் இல்லதரசிகள் வீட்டில் இருந்தப்படியே குடிசை தொழில் போல் இட்லி மாவுகளை அரைத்து கொடுத்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
இட்லி மாவு தரமாக தயார் செய்கிறார்களா???
இதற்கு பதில் தரம் இல்லை,அதைவிட உடலுக்கு பெரிய ஆபத்தை தான் இந்த ரெடிமேட் இட்லி மாவுகள் தருகிறது.அதிக லாபம் சம்பாதிக்க தரமில்லா அரிசி,உளுந்து,தண்ணீர் என சேர்பதாலும் அதிப்படியான கல் அரிமானம்,சுத்தமில்லாத முறையில் தயாரிப்பது என பல காரணங்கள் நமக்கு அதிகப்படியான பின்விளைவுகளை தருகிறது.
மாவு வெண்மையாக இருக்கவும்,புளிப்பு வாசனை வராமல் இருக்கவும்,மாவு பொங்கி வருவதற்கும் நிறைய அரைத்த மாவில் கலப்படம் செய்கிறார்கள்.
ஆமணக்கு விதை,படிகாரம்,போரிங்பவுடர்,ஆப்ப சோடா,ஈஸ்ட்,பிளீச்சிங் பவுடர் என பல கேடுவிளைவிக்கும் கெமிக்கல்கள் மற்றும் நச்சுப்பொருள்கள் கலக்கிறார்கள்...
நீங்களே பணத்தை கொடுத்து தினமும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் Slow Poison மாதிரி உணவில் நச்சை கலக்குறீர்கள்.‪#‎உண்மை‬.
இந்த உணவை உண்ணுவதால் வயற்றுபோக்கு,வாந்தி,வயிற்று வலி,மேலும் E. coli கிருமியால் வேறு உபாதைகளும் அதைவிட சிறுநீரக கல் என பல நோய்களுக்கு காரணம் நம் அறியாமை மற்றும் அலட்சியம் தான்.
இந்த மாவுகளுக்கு ISI தரம் தருவது இல்லை,அதைவிட உணவுக்கட்டுப்பாடு துறையினர் தரம் சான்றிதழும் இல்லை.எந்த நம்பிக்கையில் இதை பணம் கொடுத்து மக்கள் வாங்கி உபயோகிக்கிறார்கள் என்பது புரியவில்லை.
இட்லி மாவு அரைப்பது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் கடையில் மாவு வாங்குவதற்கு பதில் வேறு ஏதாவது ஒரு நல்ல யோசனையை செயல்படுத்துங்கள்...
4-5 பேர் ஒன்றாக சேர்ந்து ஒரு வாரம் ஒருவர் என மாவுகள் அரைத்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்..
அல்லது உங்கள் தெருவில் யாராவது இல்லதரசிகள் உதவியுடன் தரமான மாவை நீங்களே உங்கள் கண்காணிப்பில் அரைத்து தர சொல்லி பயன்படுத்துங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு சிறிது மெனக்கெடல் நிச்சயம் தேவை.
"உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்"

No comments:

Post a Comment