Jul 18, 2015

காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக சமீபத்தில் கேரளாவில் புகார் எழுந்தது. இதையடுத்து, கேரள அரசு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
அந்த கட்டுப்பாட்டில், ''உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்கள் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படும். இந்த புதிய கட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment