Jun 24, 2015

விரைவில் பீர், விஸ்கி, மதுபான வகைகள் மீதும் உணவுப் பாதுகாப்பு சோதனை

மதுபானங்கள் மீதும் வருகிறது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சோதனை

நாட்டில் விற்பனையாகும் மதுபான வகைகளின் தரநிலைகளையும், பாதுகாப்பையும் சோதனைக்குட்படுத்தும் வரைவு அறிக்கை ஒன்றை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் 2 மாதங்களில் உருவாக்கவுள்ளது.
மேகி உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் நூடுல்ஸ் விவகாரம், பால்பொருட்களின் தரநிலைகளை கண்காணிப்பு வலைக்குள் கொண்டு வந்ததைப் போல் பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளின் தரமும் சோதனையின் கீழ் விரைவில் கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 2 மாதங்களில் மதுபான வகைகளைன் தரநிர்ணயத்தை பரிசோதிக்கும் வகையிலான வரைவறிக்கை தயாரிக்கப்படும். மக்கள் இது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்” என்றார்.
பீர், விஸ்கி, வோட்கா, ஜின் அல்லாது பீர்களும் தரச் சோதனைக்குட்படுத்தப் படவுள்ளது. 
மதுபானங்களுக்கான தரநிர்ணய நிலைகள் உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து மாநிலங்களுக்கும் இது தெரிவிக்கப்படும். இதனையடுத்து அவர்கள் இதனைக் கவனித்து வரும் குறிப்பிட்ட துறையினருக்கு அறிவுறுத்தலாம் என்று கூறுகிறார் அந்த மூத்த அதிகாரி.
இதன்படி, மதுபான தயாரிப்பு, அவை பாதுகாத்து வைக்கப்படும் குடோன், விநியோக முறைகள் ஆகியவையும் பாதுகாப்பு பரிசோதனை வளையத்துக்குள் வரவுள்ளது.

No comments:

Post a Comment