May 9, 2015

புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நி யமன அலுவலர் அனுராதா தலைமையிலான, உணடு பாதுகாப்பு துறையினர் நேற்று, ஆத்தூர் நகர் பகுதியில், குடிநீர் விற்பனை குடோன், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில், ஆய்வு பணி மேற்கொண்டனர்.
அப்போது, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, லியாகத்அலி என்பவரது, "ஆண்டவர் ஸ்டோர்' கடையில், தடை செய்யப்பட்ட, 60,000 ரூபாய் மதிப்பிலான, நான்கு மூட்டை, "ஹான்ஸ்' பாக்கெட், ராஜேந்திரன் என்பவரது, குடோனில், தலா, 20 லிட்டர் கொண்ட, 56 கேன்கள், தலா ஐந்து லிட்டர் வீதம், 18 கேன்கள், பறிமுதல் செய்தனர்.
மேலும், புது பஸ் ஸ்டாண்ட், "மகாலட்சுமி ஸ்வீட், பேக்கரி' கடையில், அழுகிய நிலையில் தர்பூசணி, ஆரஞ்சு பழங்களை அப்புறப்படுத்தி, கடை உரிமையாளரை எச்சரித்தனர். 9வது வார்டு, என்.எஸ்., தியேட்டர் பின்புறம், அசோக்குமார் என்பவரது, பேக்கரி உற்பத்தி செய்யும் குடோனில், சுகாதாரமற்ற உணவு பொருள் தயாரித்தாக கூறி, "நோட்டீஸ்' வழங்கினர்.
""ஆத்தூர் பகுதியில், 74 குடிநீர் கேன் மற்றும், 60,000 ரூபாய் மதிப்பிலான, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது'', உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment