Dec 24, 2014

செவ்வாய்பேட்டையில் குடோனுக்கு சீல் வைப்பு; கலப்படம் செய்த மளிகை பொருட்கள் பறிமுதல்

சேலம் : சேலம், செவ்வாய்பேட்டையில், மளிகை பொருட்களில், கலப்படம் செய்து குடோனில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த, உணவு பாதுகாப்பு அலுவலர், அவற்றை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தார்.


சேலம், செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகில் குடோன் ஒன்று உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரீத், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.அவர், குஜராத்தில் இருந்து மளிகை பொருட்களை வரவழைத்து, அதில் கலப்படம் செய்வதாக, கலெக்டருக்கு தகவல் சென்றது. அவருடைய உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் பணியாளர்கள் குழு, சம்மந்தப்பட்ட குடோனுக்கு சென்றது.அந்த குடோனில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ததில், மளிகை பொருட்களில் பலத்த கலப்படம் இருப்பது தெரியவந்தது. மிளகு, சீரகம், வெந்தயம், கசகசா, சோம்பு உள்ளிட்டவற்றில், மரக்குச்சிகளையும், பட்டைகளையும் கலப்படம் செய்து வைத்திருந்தனர். 500 மூட்டைக்கும் மேல் இருந்த பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, கலப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர்.பறிமுதல் செய்த கலப்பட பொருளை, ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை, உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த கலப்பட பொருட்களின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய். கலப்படம் உறுதி செய்யப்படும்பட்சத்தில், சம்மந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment