Oct 6, 2014

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க 7ம் தேதி ஆலோசனை கூட்டம்

சேலம், அக்.4:
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் சேகோ நிறுவனங்களில் உணவு பொருளான ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.
ஜவ்வரிசி தயாரிப்பில் ஸ்டார்ச் கலப்படம் செய் வதை முற்றிலும் தடுத்தல், ஈரமாவு பயன்பாட்டை நிறுத்துதல், உற்பத்தியில் பாதுகாப்பற்ற ரசாயனம், திராவகம் பயன்படுத்துவதை நிறுத்துதல் தொடர் பாக ஆலோச னைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது.
இந்த கூட் டம் வரும் 7ம்தேதி, பிற்பகல் 2மணிக்கு கலெக்டர் ஆபீசில் நடக்கிறது. இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள், ஈரமாவு தயாரிக்கும் உரிமையாளர் கள், ஈரமாவு பயன்படுத்தி ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள், ஜவ்வரிசி வணிகர்கள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், இது தொடர்பான சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர், மாவட்ட வரு வாய் அலுவலர், மாசு கட்டுப்பாட்டுத் துறை கோட்ட பொறியா ளர், வணிகவரி இணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை ஆணையர், வணிகத்துறை அமலாக்கப்பிரிவு இணை ஆணையர், உணவு பகுப்பாய்வு அலு வலர், தொழிற்சாலைகள் முதன்மை துணை ஆய்வாளர் ஆகி யோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், ஜவ்வரிசி வணிகர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக் களை பதிவு செய்ய லாம். இவ்வாறு கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment