Sep 11, 2014

அரசு விதிமுறைப்படி வெல்லம் தயாரிப்பதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

சேலம், செப்.11:
தமிழகத்தில் வெல்லம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் சேலம் முதலிடம் வகிக்கிறது. சேலம் செவ்வாய்பேட்டை யில் பழமை வாய்ந்த வெல்ல ஏலமண்டி செயல் பட்டு வருகிறது. இந்த மண் டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், உற்பத்தி செய்யும் வெல்லம் ஏலத் திற்கு கொண்டு வரப்படுகிறது.
சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், மண்டிக்கு வந்து வெல்லத்தை ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர்.
சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் அதிக கலர் வரவேண்டும் என்பதற்காக, அரசு நிர்ணயித்துள்ள அளவை விட, அதிகளவில் கெமிக்கல் கலக்கப்படு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனு ராதா மற்றும் அதிகாரிகள், வெல்ல உற்பத்தி மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதன் எதிரொலியாக மண்டியில் நடக்கவிருந்த ஏலம் தடைபட்டது. வெல்ல உற்பத்தியும் அடி யோடு நிறுத்தப்பட்டது.
கடந்த 10நாட்களுக்கும் மேலாக வெல்ல உற்பத்தி நிறுத்தப்பட்டதால், ஆயி ரம் டன்வரை உற்பத்தி முடங்கியதாக உற்பத்தி யாளர் தரப்பிலும், லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்பட்ட தாக வியாபாரிகள் தரப் பிலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஒமலூர் சுற்றுப்புற பகுதி களை சேர்ந்த 50க்கும் மேற் பட்ட விவசாயிகள், உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அரசு விதிமுறைகளின் படி வெல்லம் தயாரிக்க, தயா ராக இருப்பதாகவும், இதற்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி க்கை வைத்தனர்.
இது குறித்து கருப்பூர் மண்டல வெல்லம் தயாரிக் கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கருப்பூர், செங்கரடு, வெள்ளாளப்பட்டி, வட்ட காடு, கோபிநாதபுரம் பகுதிகளில் சுமார் 2500 ஏக் கரில் கரும்பு பயிரிட்டு, அதன் மூலம் விவசாயிகள் வெல்லம் தயாரித்து வருகி றோம். இதே நேரத்தில் காமலாபுரம், நாலுகால்பாலம், முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் கரும்பாலை வைத்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் கலப்படத்திற்காக அஸ்கா சர்க்கரை, மைதாமாவு, ஜிப்சம் போன்றவற்றை கலக்கின்றனர். இதனால் நேர்மையான முறையில் அரசு விதிமுறைகளின்படி வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக் கும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களாக மொத்தமாக வெல்ல உற் பத்தி நிறுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. எனவே நேர்மையான முறை யில் செயல்படும் விவசாயி கள், வெல்லம் காய்ச்சுவதற்கு உணவு பாதுகாப்பு துறை உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சேலம், கருப்பூர் மண்டல வெல்லம் தயாரிக்கும் கரும்பு விவசாயிகள், கலப்பட வெல்லம் தயாரிக்கும் வியாபாரிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கக் கோரி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவிடம் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment