Aug 5, 2014

காரைக்குடி பகுதியில் உணவில் கலப்படம் செய்யும் வீட்டுச்சாப்பாடு கடைகள்



காரைக்குடி, ஆக. 5:
காரைக்குடி பகுதிகளில், வீட்டுச்சாப்பாடு என்ற நடத்தப்படும் கடைகளில், உணவில் கலப்படம் செய்வ தாக பொதுமக்கள் மத்தி யில் புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி பகுதிக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள், நிறுவனங்களில் வேலபார்க்கும் ஊழியர்கள் அதிக அளவில் அறை எடுத்து தங்குகின்றனர். விலை உயர்வு காரணமாக, குடும்பத்துடன் ஓட்டலில் சாப்பிட, குறைந்தது ரூ.200 வரை செலவாகிறது. அசைவ உணவு என்றால் இன்னும் அதிக செலவு ஏற்படும். இதனால், வெளியூர் பயணி கள், மாணவர்கள், நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, வீட்டுச் சாப்பாடு பெயரில் நடத்தப்படும், சிறிய கடைகள் வரப்பிரசாதமாக உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி, சுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, வியாபாரம் செய்கின்றனர். ஒருசில கடைகளில் சாப்பாட்டில் ஆட்டுக் கறியுடன், மாட்டு கறியையும் விற்பதாக புகார் வந்துள்ளது. பெரும்பாலும், மாட்டி ன் தொடைக்கறியை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இவற்றை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரி ய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமசாமி என்பவர் கூறுகையில், வீட்டுச்சாப்பாடு கடைகளில், விலை மலிவாக இருப்பதால், மக்கள் அதிக அளவில் செல்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் கடைகள், உணவில் கலப்படம் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டலில் உணவு சாப்பிட்டு இறந்தார். இதன் பிறகு, தமிழகம் முழுவதும் காலாவதி உணவு பொருட்களை, விற்பனை செய்யும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இப்போது இந்த திட்டம் கிடப்பில் உள்ளது என்றார்.
இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில். ஓட்டல்களில், சுகாதாரமற்ற உணவு பொருட்களால், தொற்று நோய் வரவாய்ப்புள்ளது. இறந்த மாட்டு கறியை சாப்பிடுவதன் மூலம் பெருங்குடலில், என்கோலைட்டீஸ் என்ற நோய் வர வாய்புள் ளது. இதன் மூலம் வயிறு உபாதைகள் எற்படும். ஒரு சிலருக்கு புட்பாய்சன் அல ர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. இது அதிகமாகும் பட்சத்தில், உயிர் இழப்பு ஏற்படலாம். மேலும், மாட் டில் உள்ள கிருமிகள் மூளை யை தாக்கி மூளையில் நீர்க ட்டி ஏற்படும். இதனால் வலிப்பு நோய் ஏற்படும். மே லும் அல்சர், ஜீரணகோ ளாரு உட்பட பல்வேறு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment