Aug 4, 2014

ரயில் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி:ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்


புதுடில்லி:கோல்கட்டா ராஜதானி ரயிலில், பயணிக்கு வழங்கப் பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐ.ஆர்.சி.டிசி.,க்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடுமையான நடவடிக்கை:ரயில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. ரயில்களில் வழங்கப்படும் உணவுகள், தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து, தற்போது பொறுப்பேற்றுள்ள பா.ஜ., தலைமையிலான அரசு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை பரிசோதிக்க, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகள், கடந்த சில நாட்களாக மேற்கொண்ட சோதனையில், கோல்கட்டா ராஜதானி ரயிலில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில், கரப்பான் பூச்சி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும் பல நிறுவனங்கள்:இதையடுத்து, அந்த உணவை வழங்கிய, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, புஸ்பக் எக்ஸ்பிரஸ், மொதிஹரி எக்ஸ்பிரஸ், சிவகங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்பிள் மெயில், பஞ்சாப் மெயில், சண்டிகார் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களி லும், தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த உணவு களை வழங்கிய நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment