Aug 30, 2014

150 டன் வெல்லம் தேக்கம் உணவு பாதுகாப்பு அலுவலரை உற்பத்தியாளர்கள் முற்றுகை

சேலம், ஆக.29:
சேலம் செவ்வாய்பேட் டை மூலப்பிள்ளையார் கோயில் அருகே வெல்லம் ஏல மண்டி கட ந்த பல வருடங்களாக செய ல்பட்டு வருகிறது. இதில், சேலம் மாவட்டத்தின் தேக்கம்பட்டி, வட்டக்காடு, கரு ப்பூர், மூங்கில்பாடி, காமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெல்லத்தினை கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் இங்கு வந்து வெல்லத்தினை வாங்கி செல்கின்றனர். இந்த மண்டியில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட உணவு பாதுகா ப்பு துறை நியமன அலுவலர் அனுராதா செவ்வாய்பேட் டை பகுதி வெல்ல வியா பார கடைகளில் நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில் உணவு பாது காப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட, அதிக ரசா யனம் கலந்துள்ளதாகவும், வெல்ல தயாரிப்பிற்கு சர்க் கரை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வெல்லத்தை பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.
இதனால் நேற்று காலை நடைபெறவிருந்த வெல்ல ஏலத்தில் வியாபாரிகள் யா ரும் கலந்து கொள்ளவில் லை. ஏலத்திற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 150 டன் வெல்லம் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. அந்த வெல்லம் அனைத்தும் வாகனங்களிலேயே வைக்கப்பட்டன. இது குறித்த வியாபாரிகளிடம் கேட்ட போது, வெல்ல தயாரிப்பு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இந்த வெல்லத்தை விற்பனை செய்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என வும் உற்பத்தியாளர்களி டம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வெல்ல உற்பத்தியா ளர்கள், நேற்று காலை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப் போது அங்கு வந்த நியமன அலுவலர் அனுராதாவை யும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறுகை யில், காலங்காலமாக தற் போது உள்ள முறைகளின்படிதான் வெல்லம் தயா ரித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பிரச்னை யும் எழவில்லை. தற்போது அதிகாரிகளின் நடவடிக்கையால் ஒரேநாளில் (28ம் தேதி) 150 டன் வெல்லம் தேக்கமடைந்துள் ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்க ணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறு கையில், விதிகளின் படி வெ ல்ல தயாரிப்பில் சர்க்கரை யை பயன்படுத்த கூடாது. அது தவிர அழுக்கு நீக்குவதற்கு என அதிகப்படியான ரசாயனங் களையும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரசாயனங்களால் உடலு க்கு பெ ரும் தீங்கு ஏற்படும் என் றார்.
தொடர்ந்து நீடித்த இந்த வாக்குவாதத்தில் நேற்று ஒரு நாள் உற்பத்தி செய்த வெல்லத்தை மட்டும் விற்க அனுமதிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மே லும் வரும் நாட்களில் சங்க கூட்டத்தை கூட்டி, விதிக ளின் படி வெல்லம் தயாரி க்க உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்தனர். இதன் பின் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது.

2 comments:

  1. FDA Salem teams work is appreciated.

    ReplyDelete
  2. Please Note in Cochin Adulterated Peppers were destroyed after found it had been used some oil. But in Salem around not less than 20000Mtons of Sago which is adulterated using unsafe chemicals and those were using in Paper Industries found and distributed to Human consumption. Still the progress of using chemicals is going in manufacturing side and they are preparing themselves by storing Wet Starch in the tank for preparing later.
    Pepper also related to Farmer Issues and Sago also Farmer Issues.

    ReplyDelete