Jul 3, 2014

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரசு மருத்துவமனை கேன்டீனில் திடீர் ஆய்வு


நாமக்கல், ஜூலை 3:
நாமக்கல் அரசு மருத்துவமனை கேன்டீன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாஸ்கர் மற்றும் பாலமுருகன் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனை கேன்டீன், நடராஜபுரத்திலுள்ள குழந்தைகள் மையம், மோகனூர் ரோட்டிலுள்ள ஆதிதிராவிடர் நலவிடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுப்பொருட்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, அரசு மருத்துவமனை கேன்டீனில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் கூடுதல் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், குழந்தைகள் மையத்தில் நடந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முன்பு, பணியாளர்கள் முதலில் உணவை சாப்பிட்டு பரிசோதித்து கொள்ள வேண்டும். சுத்தமான முறையில் உணவுப் பொருட்களை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பணியாளர்களிடம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment