Jul 3, 2014

எண்ணெய் ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆத்தூர்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், ஆத்தூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். ஆத்தூர், முல்லைவாடி செல்லியம்மன் ஆயில் மில்லில், சமையல் எண்ணெய் என, குறிப்பிடப்பட்டிருந்த பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில், பாமாயில் எண்ணெயை, சமையல் எண்ணெய் என, குறிப்பிடக் கூடாது. எந்த வகை எண்ணெய் என்பதை, குறிப்பிட்டு தான் விற்பனை செய்ய வேண்டும். என, எச்சரித்தனர். தொடர்ந்து, மற்றொரு ஆயில் மில்லில், 80 சதவீதம் பாமாயில், 20 சதவீதம் கடலை எண்ணெய் என, பாக்கெட் மீது, கடலை படம் மட்டும் குறிப்பிட்டு, கடலை எண்ணெய் என, விற்கக் கூடாது என, எச்சரிக்கப்பட்டது. பைத்தூர் ரோடு மற்றும் அம்மம்பாளையம் பகுதியில் உள்ள, சேகோ பேக்டரிகளில், மக்காச்சோளம் கலப்படத்தில், ஸ்டார்ச், ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறதா என, குடோன்களில் ஆய்வு செய்தனர். உணவு பொருட்களில் கலப்படம் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment